சீனாவுடன் இராணுவ உடன்படிக்கை: ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
2 years ago
சீனாவுடன் இராணுவ உடன்படிக்கை: ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

சீனாவுடன் இலங்கைக்கு இராணுவ உடன்படிக்கை உள்ளதாக கூறப்படும் விடயங்கள் கட்டுக் கதைகள் எனவும் சீனாவுடன் எந்தவொரு இராணுவ உடன்படிக்கையும் இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 தனது பிரான்ஸ் பயணத்தின் போது France24க்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

 அத்துடன், சீனாவுடன் இலங்கைக்கு இராணுவ உடன்படிக்கை உள்ளதாக கூறப்படும் விடயங்கள் வெறுமனே கட்டுக்கதைகள் எனவும், சீனா இலங்கையின் வர்த்தக நண்பன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 எனினும், ஒட்டுமொத்த பாதுகாப்பு கட்டுப்பாடும் இலங்கையிடம் மட்டுமே இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 இதேவேளை, நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும், வார இறுதியில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பில் வெவ்வேறு குழுக்களுடன் விவாதங்கள் நடந்து வருகின்றன. 

கடன் மறுசீரமைப்பு திட்டம் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும், வார இறுதியில் அது இறுதி செய்யப்படும்.

 அது வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு செல்லும், பொது நிதிக் குழுவிற்கு முன்பாகவும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அது விவாதிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும். 

அதன்பிறகு, கடனாளிகளுடன் எஞ்சிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும்" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கியுள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!