தாயின் நோயினால் உயிரிழந்த ஒரு வயதுக் குழந்தை
தாய்க்கு ஏற்பட்ட வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தொண்டையில் உணவு சிக்கிக் கொண்ட துரதிர்ஷ்டவசமான செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பான சம்பவம் பொகவந்தலாவின் பிரிட்வெல்வத்த பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது.
இந்த அசம்பாவித சம்பவத்தில் அதே பகுதியில் வசித்து வந்த ஒரு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
26 வயதுடைய தாய்க்கு மதிய உணவை தயாரித்து தனது கைக்குழந்தைக்கு ஊட்டிவிடும்ட போதே வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர், வீட்டினுள் குறித்த பெண் கிடப்பதைக் கண்ட அயலவர்கள்இ தேடியபோது சிறுமி தனது தாயைக் கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பதைக் கண்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்தது. சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுமியின் தொண்டையில் உணவு சிக்கியதால் இந்த பரிதாப மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
சிறுமியின் தாயான 26 வயதுடைய பெண் சில காலமாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தற்போது தெரியவந்துள்ளது.
மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பக்வந்தலாவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.