உலகளவில் அதிக காற்று மாசுபாடு உள்ள நகரமாக கனடாவின் மொண்டிரியல் நகரம்

#world_news #Tamilnews #Breakingnews
Mani
3 years ago
உலகளவில் அதிக காற்று மாசுபாடு உள்ள நகரமாக கனடாவின் மொண்டிரியல் நகரம்

காட்டுத்தீயின் தாக்கம் காரணமாக உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக கனடாவின் மாண்டிரியல் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த IQAir என்ற நிறுவனம் உலகளவில் காற்றின் தரம் குறித்த தகவலை வெளியிட்டு வருகிறது. இதன்படி மாண்டிரியல் நகரில் உலகிலேயே மிக மோசமான அளவில் காற்று மாசுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

காற்றுமாசுப்பாட்டால் மாண்டிரியலில் புகழ் பெற்ற அயர்ன்மேன் டிரையத்தான் போட்டி ரத்து செய்யப்பட்டதுடன், திறந்தவெளி விளையாட்டு திடல்கள், நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனிடையே, கனடாவில் காட்டுத்தீ ஏற்பட்ட இடங்களின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4