மலையகத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

#SriLanka #NuwaraEliya #kandy #Lanka4 #sports
Kanimoli
2 years ago
மலையகத்தில்  விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

மலையகத்தில் உதைப்பந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து கூட்டு பொறிமுறை ஒன்று உருவாக்குப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

 அத்துடன், இலங்கையில் தேசிய மட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்களின் ஆலோசனைகளும், ஒத்துழைப்புகளும் பெறப்படும் எனவும் தெரிவித்தார். உதைப்பந்தாட்ட மேம்பாடு உட்பட விளையாட்டு துறை அபிவிருத்தி சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டன.

 கழக உறுப்பினர்கள் தமது தரப்பு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விளையாட்டுத்துறை அமைச்சருடன் இது விடயம் சம்பந்தமாக பேச்சு நடத்தப்படும் எனவும் அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!