விமான நிலைய ஊழியர் ஒருவர் விமானத்தின் இயந்திரத்தில் சிக்கி பலி!
நேற்று இரவு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் டெக்சாஸ் மாநிலம் சாண்டியாகோ நகருக்கு இரவு 10.30 மணியளவில் வந்தது.
விமானம் சாண்டியாகோ விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமான ஓடுதளத்தில் விமானம் மெல்ல சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தின் ஒரு எஞ்சின் இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது, தரையிறங்கிய விமானம் அருகே விமான நிலைய ஊழியர் ஒருவர் வந்துள்ளார். விமானத்தின் ஒற்றை எஞ்சின் இயங்கிவந்த நிலையில் திடீரென அந்த ஊழியர் விமான எஞ்சினுக்குள் இழுக்கப்பட்டார். விமான எஞ்சினில் இருந்து வந்த அதிக அழுத்தத்தால் அந்த ஊழியர் விமான எஞ்சினுக்குள் இழுத்துக்கொள்ளப்பட்டார். விமான எஞ்சினில் சிக்கிய அந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், அந்த நபரின் உடலை கைப்பற்றிய போலீசார், தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். விமானப் பணிப்பெண் விமானத்தை அணுகும்போது இயந்திரத்தின் அழுத்தம் காரணமாக விமானத்திற்குள் இழுக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.