கடன் மறுசீரமைப்பு திட்டம்; நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் ஆதரவு இல்லை!

#SriLanka #Harsha de Silva
Mayoorikka
2 years ago
கடன் மறுசீரமைப்பு திட்டம்; நிபந்தனைகள்  பூர்த்தி செய்யப்படாவிட்டால் ஆதரவு இல்லை!

சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்படாவிட்டால் ஜூலை முதலாம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 அரசாங்கம் கடன் குறைப்பு நடவடிக்கைக்கு சென்றால், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தை தமது கட்சி ஆதரிக்காது என்றும் வைப்பாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

 அதேநேரம், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை ஜூன் 28-ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பித்து, ஜூன் 29-ஆம் திகதி பொது நிதிக் குழுவுக்குப் பரிந்துரைத்து, சனிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கான திட்டங்களை எதிர்க்கட்சிகள் கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயம் தொடர்பில் தம்முடனும் எதிர்க்கட்சித் தலைவருடனும் தொலைபேசியில் உரையாடினார் என்று குறிப்பிட்ட ஹர்ஷ டி சில்வா, அந்த தொலைபேசி உரையாடல் தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!