சிறுவர் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் பொலிஸ் கூண்டில் தூக்கிட்டு தற்கொலை
சிறுவர் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் நேற்று (24) காலை பொலிஸ் கூண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். அம்பலாந்தோட்டை வடுருப்புவ அக்கரகல்கொட பகுதியைச் சேர்ந்த 48 வயதான வசந்த புஷ்பிகா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் 23ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும் வரை பொலிஸ் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அப்போது, சந்தேக நபர் பொலிஸ் கூண்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் தொடர்பில் தங்காலை பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்னவின் பணிப்புரையின் பிரகாரம் ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.