இந்தியாவின் உதவியால் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துள்ளன!

#India #SriLanka
Mayoorikka
2 years ago
இந்தியாவின் உதவியால் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துள்ளன!

இந்தியாவின் உதவியால் இலங்கையின் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்ற அமைதி மாநாட்டில் பங்கேற்ற விஜயதாச ராஜபக்ஷ செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

 இதனை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதுடன் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார்.

 இதன்போது, பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்த நாட்டை மீட்க இலங்கை, இந்திய அரசிடம் உதவிகேட்டது. இதையடுத்து, இலங்கை அரசுக்கு இந்தியா பல கோடி ரூபாய் கடனுதவி வழங்கியது. 

இந்தநிலையில், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த இலங்கை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. 

அத்துடன், மோடி தலைமையிலான இந்திய அரசின் உதவியால் இலங்கை பெரும்பாலான பிரச்சினைகளை தீர்த்துவிட்டதாக இலங்கை நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!