23,000 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

#SriLanka #Arrest #Police
Prathees
2 years ago
23,000 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

23,000 போதை மாத்திரைகளை வேனில் கொண்டு சென்ற சந்தேகநபர் ஒருவர் நுரைச்சோலை கரம்ப பொலிஸார் மற்றும் கடற்படையினரின் கூட்டு வீதித் தடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

 நுரைச்சோலை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கல்பிட்டியிலிருந்து பாலாவி நோக்கிச் சென்ற வேன் ஒன்று வீதித் தடுப்பில் சோதனையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 அங்கு, வேனில் போதை மாத்திரைகள் பதுக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 சம்பவம் தொடர்பில் ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் இன்று புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!