சிறைச்சாலை அதிகாரியின் சீருடையுடன் தப்பிச் சென்று மருதானையில் சிக்கிய கைதி

#SriLanka #Prison #Welikada
Prathees
2 years ago
சிறைச்சாலை அதிகாரியின் சீருடையுடன் தப்பிச் சென்று மருதானையில் சிக்கிய கைதி

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து சிறைச்சாலை அதிகாரியின் சீருடையுடன் தப்பிச் சென்ற கைதி ஒருவர் மருதானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு தப்பிச் சென்றவர் மரண தண்டனைக் கைதி என சிறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 இன்று காலை 9.30 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலை வாசலில் இருந்து சிறைக்காவலர் ஒருவரின் சீருடை அணிந்து, கடமைகளை நிறைவேற்றிய பல அதிகாரிகளை வாழ்த்திவிட்டு வெளியே வந்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 வெளியே வந்ததும் முச்சக்கரவண்டி ஒன்றை வேகமாக நிறுத்திவிட்டு அவர் சென்றுகொண்டிருந்த போது சந்தேகமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் முச்சக்கரவண்டியை துரத்திச் சென்றுள்ளனர்.

 மருதானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட கைதி மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!