நோய் கொடுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்
#India
#Suicide
#Disease
Prasu
1 year ago

நயினார்மண்டபம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ரேகா. இவர்களுடன் ரேகாவின் தந்தை கலைமணி(வயது64). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக கலைமணி நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இந்தநிலையில் கலைமணிக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கலைமணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டின் மாடியில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மகள் ரேகா கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



