இந்தியா குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்

#India #Women #America #D K Modi
Prasu
2 years ago
இந்தியா குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க துணை அதிபரும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ் விருந்து அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- இந்தியா எனது வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதி. அந்நாட்டுடன் நான் ஆழமாக இணைந்திருக்கிறேன். இந்தியாவில் உள்ள வரலாறு மற்றும் போதனைகள் எனக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் அவை நிச்சயமாக முழு உலகத்தையும் வடிவமைத்துள்ளன. 

இந்தியா அதன் தத்துவத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது. என்னையும் என் சகோதரி மாயாவையும் சிறு வயதில் எங்களது தாய் ஒவ்வொரு வருடமும் இந்தியாவுக்கு அழைத்து செல்வார்.

மெட்ராசில் (சென்னை) இருந்த தாத்தா-பாட்டியை பார்க்க செல்வோம். எனது வாழ்க்கையில் மிகவும் முக்கிய நபர்களில் என் தாத்தா ஒருவர். என் குழந்தை பருவம் முழுவதும் நண்பர்களாக இருந்தோம் சிறு வயதில் தாத்தாவுடன் நடந்த உரையாடல்கள் எனது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

எனது தாத்தா பி.வி.கோபாலனிடமிருந்தும் என் தாய் ஷியாமளாவின் அர்ப்பணிப்பு, உறுதி, தைரியம் ஆகியவற்றில் இருந்தும் நான் கற்றுக்கொண்ட பாடங்கள்தான் நான் உங்கள் முன்பு துணை அதிபராக நிற்பதற்கு காரணம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!