ஜப்பான் படத்தில் தனது காட்சிகளை நிறைவு செய்த கார்த்தி
#Cinema
#TamilCinema
#Movies
Mani
2 years ago

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட டீசர் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி 'ஜப்பான்' திரைப்படத்தில் தனது காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டதாகவும், அடுத்த இரண்டு வாரங்களில் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது.



