இந்தியாவில் 15 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் அமேசான்

#India #Amazon #America #world_news
Mani
2 years ago
இந்தியாவில் 15 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் அமேசான்

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அமெரிக்க பயணத்தின் போது, ​​பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க - இந்திய தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கலந்து கொண்டார்.

பிரதமர் மோடிக்கும், உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் இணையதளமான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஆன்ட்ரூ ஜெஸ்ஸி சந்தித்தார். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி, பேச்சுவார்த்தைகள் சிறப்பாக இருந்தது. இந்தியாவில் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான அமேசான், ஏற்கனவே 11 பில்லியன் அமெரிக்க டாலர்களை நாட்டில் முதலீடு செய்துள்ளது. தற்போது நாங்கள் இந்தியாவில் மீண்டும் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய உள்ளோம். இதன் மூலம் இந்தியாவில் எங்கள் முதலீடு 26 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும்' என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!