வீதியால் பயணித்துக் கொண்டிருந்த தந்தை மகன் மீது முறிந்து வீழ்ந்த தென்னை மரம்!
#SriLanka
Mayoorikka
2 years ago
வீதியால் பயணித்துக் கொண்டிருந்த தந்தை மற்றும் மகன் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்த சம்பவம் ஒன்று கம்பஹாவில் இடம்பெற்றுள்ளது.
கம்பஹா கெலகடிகெணாவில் வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை துரதிஷ்டவசமாக தென்னை மரம் முறிந்து மோட்டார் சைக்கிளில் விழுந்ததில் தந்தையும் மகனும் காயமடைந்துள்ளர்.
அதனை அடுத்து குறித்த நபர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


