கேகாலையில் தொல்பொருட்களை தோண்டிக்கொண்டிருந்த இருவர் கைது
#SriLanka
#Arrest
#Police
Prathees
2 years ago
கேகாலை, கலிகமுவ மற்றும் அசிதெனிய பிரதேசங்களில் தொல்பொருட்களை தோண்டிக்கொண்டிருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹக்கஹின்ன மற்றும் நிகவெரட்டிய பிரதேசத்தை சேர்ந்த இருவர் அங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் கேகாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்