நாட்டின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தேசிய பௌதீக திட்டமிடல்!

#SriLanka
Mayoorikka
2 years ago
நாட்டின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தேசிய பௌதீக திட்டமிடல்!

நாட்டின் அடுத்தகட்ட அபிவிருத்தி பணிகளை தேசிய பௌதீக திட்டமிடலுக்கமைய முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான கொரடாவுமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

 தேசிய பௌதீக திட்டமிடலுக்கு அமைவான வரைவுகள் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கருத்தறியப்பட்டதன் பின்னர் அமைச்சரவையில் சமர்பித்து அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2048 ஆம் ஆண்டில் நாட்டின் அபிவிருத்திக்கான நோக்கு என்ற திட்டத்திற்கு இணையாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் நாட்டின் அதிவேக வீதிகள் நிர்மாணம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தேசிய பௌதீக திட்டமிடலின் கீழ் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

 இந்த வேலைத்திட்டம் இரு வருடங்களுக்கான முன்னோடித் திட்டமாக முன்னெடுக்கப்பட உள்ளதோடு, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களிலும் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

 ‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!