ரஷ்ய ஆயுதப் படைகளை உலகளாவிய குற்றவாளிகளின் பட்டியலில் சேர்த்த ஐக்கிய நாடுகள் சபை
#Crime
#UN
#Russia
#Blacklist
Prasu
2 years ago
ஐக்கிய நாடுகள் சபை ரஷ்யாவின் ஆயுதப் படைகளை உலகளாவிய குற்றவாளிகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.
இது குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு உக்ரைனில் 136 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 518 குழந்தைகள் அங்கவீனர்களாகியதாகவும், மருத்துவமனைகள் மீது 480 தாக்குதல்களை நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தொண்ணூற்றொரு குழந்தைகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை உக்ரைனும் போரில் 80 குழந்தைகளை கொன்றுள்ளது, 175 குழந்தைகள் காயப்படுத்தப்பட்டுள்ளனர்.
212 மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியது. இருப்பினும் உக்ரைன் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.