மோசமான காலநிலை காரணமாக நெதர்லாந்தில் விமான போக்குவரத்து பாதிப்பு
#Flight
#Climate
#Netherland
Prasu
2 years ago
நெதர்லாந்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த இடி-மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதில் நாட்டின் பல பகுதிகள் மழைநீரில் மூழ்கி வெள்ளக்காடாக மாறின.
அவசியமின்றி வீட்டினை விட்டு வெளியேற பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக ஆம்ஸ்டர்டாம் சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டி இருந்த 37-க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஆம்ஸ்டர்டாம் வரக்கூடிய சர்வதேச விமானங்களின் சேவையை ரத்து செய்து அண்டை நாடுகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
நிலைமை சீராகும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என அந்த நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.