டாலர் பயன்பாட்டை குறைக்க தீர்மானித்துள்ள பாகிஸ்தான் அரசு

#government #Pakistan #Dollar
Prasu
2 years ago
டாலர் பயன்பாட்டை குறைக்க தீர்மானித்துள்ள பாகிஸ்தான் அரசு

பாகிஸ்தான் அமெரிக்க டாலரை அடிப்படையாக கொண்டு மற்ற நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் ரஷியாவுடன் பாகிஸ்தானின் எண்ணெய் தொடர்பான வர்த்தகம் சீன நாட்டின் நாணயமான யுவானில் உள்ளது.

அதன்மூலம் ரஷியா கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெய் வழங்கியது. அப்போது நட்பு நாணயங்களில் செலுத்திய பணம் மூலம் பாகிஸ்தானுக்கு எண்ணெய் வழங்க தொடங்கியதாக ரஷிய எரிசக்தி துறை மந்திரி நிகோலாய் ஷுல்கினோவ் கூறினார்.

இந்தநிலையில் ரஷியாவுடனான பரிவர்த்தனைகளில் பல்வேறு நாணயங்களை பயன்படுத்தவும், இரு தரப்பு வர்த்தகத்தில் டாலரின் பங்கை குறைக்கவும் பாகிஸ்தான் தயாராக உள்ளது என அந்த நாட்டின் வர்த்தக மந்திரி சையது நவீத் கமர் தெரிவித்துள்ளார். 

மேலும் பண்டமாற்று முறையை தொடங்குவதன் மூலம் வெளிநாட்டு நாணயங்களை நம்பியிருப்பதை குறைக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!