அஸ்வசும தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்
அஸ்வசும திட்டத்திற்கு குறைந்த வருமானம் பெறுவோரை தெரிவு செய்யும் கணக்கெடுப்பில் குறைபாடு இருப்பின் அதனை நிவர்த்தி செய்து தருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அந்த வேலைத்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களை அகற்றுவது எந்த வகையிலும் நடைபெறாது என்றார்.
முன்பை விட அதிக எண்ணிக்கையிலான குறைந்த வருமானம் பெறுவோருக்கு நன்மைகளை வழங்கும் நோக்கில் அஸ்வசும வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.
அஸ்வசும வேலைத்திட்டத்திற்கு வருமானம் ஈட்டுபவர்களை தெரிவு செய்வதற்கான கணக்கெடுப்பில் குறைபாடுகள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வேலைத்திட்டத்துக்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.