பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ நியமனம்
#SriLanka
#Lanka4
#srilankan politics
Kanimoli
2 years ago
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் பதவிக்கு பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இன்று வெள்ளிக்கிழமை (23) உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
பதவி நீக்கப்பட்ட முன்னாள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவிற்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.