தியாகி வாமதேவா அவர்கள் புற்றுநோய் சிறுவனுக்கு யாழில் அன்பளிப்பு
இன்று வெள்ளிக்கிழமை வள்ளல் தியாகி ஐயா என்றழைக்கப்படும் தியாகி தியாகேந்திரன் வாமதேவா அவர்களது ஸ்ரீ உச்சி மகா ஞான வைரவர் ஆலயத்தில் மகா சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை பிரசித்தி வாய்ந்த ஊடகத்தளமான லங்கா4 யுடியுப்பில நேரடி ஒளிபரப்பு செய்திருந்தது.
மேலும் தன் முன்னோர்கள் வழிபட்ட குலதெய்வ வழிபாட்டினை சிறப்புறத் தொடரும் தியாகி அறக்கட்டளை ஸ்தாபகத் தலைவர், தியாகி தியாகேந்திரன் வாமாதேவா அவர்கள் தனது நிறுவன வளாகத்தில் மிகச்சிறந்த முறையில் புனருத்தாபனம் செய்த ஸ்ரீ உச்சி மகா ஞான வைரவர் ஆலயத்தின் மகா சங்காபிஷேகப் பெருவிழா இன்று நடைபெற்றவேளை தெய்வாதீனமாக நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று திருவருள் கூடியது.
வழிபாட்டிற்கு வந்திருந்த ஒரு சிறுவனை தன்னருகே அழைத்து பூஜை நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தவேளை பிள்ளையின் தாயின் முகத்தில் தெரிந்த கவலையை அவதானித்த தியாகி அவர்கள் தாயை அழைத்து விசாரித்தபொழுது பிள்ளை கொடிய நோயினால் அவதிப்படுவதை அறிந்து உடனடியாகவே ஒரு லட்ச ரூபாவை தாயிடம் கொடுத்து ஆறுதல் நம்பிக்கை கூறி அன்பு பாராட்டியதை ஆலய வளாகத்திலிருந்த அனைவரும் நெகிழ்ச்சியுடன் அவதானித்து, பிள்ளையின் நலனுக்காக ஞான வைரவப்பெருமானை வழிபட்டதைக் கணக்கூடியதாக இருந்தது.
தியாகி அறக்கட்டளையானது மேன்மேலும் வளர வேண்டுமெனவும் அவரது சேவை தொடர வேண்டுமெனவும் வாழ்த்தி நிற்கின்றது லங்கா4.