மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் உதுல் பிரேமரத்ன உட்பட 22 பேர் விடுதலை

#SriLanka #Colombo #Court Order #release
Prathees
2 years ago
மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர்  உதுல் பிரேமரத்ன உட்பட  22 பேர் விடுதலை

2010ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் உதுல் பிரேமரத்ன உள்ளிட்ட 22 பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​நீதிபதி தனது தீர்ப்பை அறிவித்ததுடன், பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இந்த விசாரணையில் முன்வைக்கப்படவில்லை என்று கூறினார்.

 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் உதுல் பிரேமரத்ன உட்பட 22 பிரதிவாதிகளுக்கு எதிராக பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!