தேசியத்தலைவர் பிரபாகரனுடைய மரபணு அறிக்கையை வெளியிடுவதில் என்ன சிக்கல்? சிறிதரன் சரமாரி கேள்வி

#SriLanka #Jaffna
Mayoorikka
2 years ago
தேசியத்தலைவர் பிரபாகரனுடைய மரபணு அறிக்கையை வெளியிடுவதில் என்ன சிக்கல்? சிறிதரன் சரமாரி கேள்வி

தமிழ் மக்கள் சார்பாக போராட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டமை சார்பாக தவறாக குற்றம் சாட்டப்பட்டு இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு பிற்போடப்பட்டுள்ளது என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

 இதன் போது இன்றைய தினம் (23) இடம்பெற்ற நீதிமன்ற வழக்கு தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், இனவாதம் பேசும் இனவாதிகள் யார் என்பது குறித்தும், தலைவர் பிரபாகரனின் மரபு அறிக்கை மற்றும் மருந்து தட்டுபாடு உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கருத்து தெரிவித்துள்ளார்.

 தேசியத்தலைவர் வே.பிரபாகரனுடைய மரபணு அறிக்கையை இலங்கை அரசாங்கம் வெளியிடுவதில் தயக்கம் காட்டுகின்ற நிலையில் அதில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

 இன்றையதினம் வழக்கு விசாரணக்காக யாழ்ப்பாண நீதிமன்றம் வருகை தந்திருந்த நிலையில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

 ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை தமிழ் மக்களுக்காக இந்த மண்ணிலே முன்னெடுத்த தேசியத் தலைவரின் மரபணு அறிக்கையை வெளியிடுவதில் இந்த அரசாங்கம் தயக்கம் காட்டுகிறது.

 இந்த தயக்கம் ஏதோ ஒரு உள்நோக்கத்தை வெளிப்படுத்துகின்றது. இதேவேளை முன்னாள் போராளிகளான கருணா மற்றும் தயா மாஸ்டர் ஆகியோர் மூலம் அதனை உறுதிப்படுத்தியதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.

 அவர்கள் பார்வையிடலாமே தவிர, மரபணு அறிக்கையை வெளியிடக்கூடிய அளவிற்கு, அவர்கள் நிபுணர்கள் அல்ல. அத்தோடு அவர்களுக்கு வைத்திய அறிவும் கிடையாது.

 ஆகவே அரசாங்கம் தான் தெளிவான எண்ணத்தைக் கொண்டிருந்தால், உண்மையை வெளியிடுவது பொருத்தமானது எனவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!