இசைக்கச்சேரியின் போது பெய்த ஆலங்கட்டி மழையால் 100பேர் பாதிப்பு
#Hospital
#America
#Rain
#Rescue
Prasu
2 years ago
கொலராடோவின் சின்னமான ரெட் ராக்ஸ் ஆம்பிதியேட்டரில் லூயிஸ் டாம்லின்சன் கச்சேரியில் ஆலங்கட்டி மழை பெய்ததில் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்தனர்.
மேலும் பலத்த காயம் அடைந்த 7 பேர் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், மற்றவர்களுக்கு அந்த இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
டென்வரில் இருந்து 10 மைல் (16 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ஒரு திறந்தவெளி இடமாக இருந்ததால்இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
கச்சேரியில் கலந்து கொண்ட பல பயனர்களால் ஆலங்கட்டி மழையின் வீடியோக்கள் ட்விட்டரில் வெளியிடப்பட்டன.
மேற்கு மெட்ரோ தீயணைப்பு மீட்புத் துறையின்படி,80 முதல் 90 பேர்” சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றனர்.காயங்கள் வெட்டுக்கள் மற்றும் உடைந்த எலும்புகள் அடங்கும் என்று ஒரு தீயணைப்பு துறை அதிகாரி கூறினார்.