பிரான்சில் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியஸ்தரை சந்தித்த ஜனாதிபதி!

#SriLanka #Sri Lanka President #France
Mayoorikka
2 years ago
பிரான்சில் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியஸ்தரை  சந்தித்த ஜனாதிபதி!

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் உடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

 பிரான்சில் புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்துக்கான உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி அங்கு சென்றுள்ள நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

 இதேவேளை, ஏற்கனவே கடுமையான நிதி அழுத்தத்தில் உள்ள ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் பெரும் பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால், அமெரிக்க-சீனா பதட்டங்களை நிவர்த்தி செய்வதை வல்லரசுகள் இலக்காகக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

 அத்துடன், பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதியளிப்பு உடன்படிக்கைக்கான சர்வதேச உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கடனை உடனடியாக மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!