இலங்கை பாடசாலைகளின் பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழி!

#SriLanka #Japan #students
Mayoorikka
2 years ago
இலங்கை பாடசாலைகளின் பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழி!


இலங்கை பாடசாலைகளின் கல்விப் பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு விசேட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று அறிவித்துள்ளார்.

 நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், ஜப்பானில் வேலை வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு எதிர்காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சீர்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 இதன் மூலம் பாடசாலைகளில் 6ம் வகுப்பு முதல் ஜப்பானிய மொழியை பாடமாக இணைப்பதற்கு கல்வி அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நாணயக்கார தெரிவித்தார்.

 ஜப்பானில் வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்டு எதிர்காலத்தில் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நோக்குடன் இந்த திட்டம் கொண்டுவரப்பப்படவுள்ளது.

 5000 ஜப்பானிய மொழி பயிற்றுவிப்பாளர்களைக் கொண்ட குழுவை ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல் உட்பட வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மேலும் பாராளுமன்றத்தில் விளக்கினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!