தன்னுடைய ஓவர் பப்ளிசிட்டியால் சமீப பிரச்சனையில் சிக்கி வரும் வடிவேலு

#Cinema #Actor #TamilCinema #Lanka4
Kanimoli
2 years ago
தன்னுடைய ஓவர் பப்ளிசிட்டியால் சமீப பிரச்சனையில் சிக்கி வரும்  வடிவேலு

தன் நகைச்சுவை உணர்வால் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் வடிவேலு. தன் காமெடிகள் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். இந்நிலையில் இவரின் ஓவர் பப்ளிசிட்டியால் மார்க்கெட் இழக்கும் பரிதாபத்திற்கு உண்டாகிய சம்பவத்தை பற்றி இங்கு காண்போம். நீண்ட சர்ச்சைக்கு பிறகு, படம் நடிக்க முயற்சி எடுத்து வரும் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். 

அதிலும் குறிப்பாக, மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற்று இருக்கிறார். அதைத்தொடர்ந்து பி வாசு இயக்கத்தில் உருவாகும் படம் தான் சந்திரமுகி 2. சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை பெரிதளவு பேசப்பட்ட நிலையில், தற்பொழுது சந்திரமுகி 2 வில் இவரை நடிக்க வைக்க கால்ஷீட் கேட்டு இருக்கிறார் பி.வாசு. அதற்கு வடிவேலும் நடிக்க ஒப்புக்கொண்டு இப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில் படப்பிடிப்பிற்கு வடிவேலு சரிவர வராததால் பி.வாசு, அவரிடம் இப்படத்தை நடித்துக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு தற்பொழுது என்னால் முடியாது எனக்கு வேறு ஒரு கமிட்மெண்ட் இருக்கிறது. அந்த கமிட்மெண்டை என்னால் தவிர்க்க முடியாது. அதை முடித்துவிட்டு வேண்டுமானால் இப்படத்தில் நடித்துக் கொடுக்கிறேன் என்று வடிவேலு, வாசு இடம் கூறியுள்ளார். 

அதற்கு இயக்குனர், உங்களின் காட்சிகள் முக்கால்வாசி முடிவு பெற்றதால், இன்னும் ஒரு நாள் நடித்தால் போதும். உங்களின் அனைத்து காட்சியும் இப்படத்தில் முடிவு பெற்றுவிடும் என கூறியுள்ளார். அவ்வாறு நீங்கள் வரவில்லை என்றால், நீங்கள் இடம்பெறும் காட்சிகள் பாதிலேயே நின்று விடும். இருப்பினும் வடிவேலு என்னால் முடிவே முடியாது என பிடிவாதமாக கூறியுள்ளார். 

அவ்வாறு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இறுதி வரை மறுத்த வடிவேலுவை பார்த்து வெளியே போயா என பி.வாசு கடுமையாக நடந்துள்ளார். தன்னுடைய ஓவர் பப்ளிசிட்டியால் சமீப காலமாக இது போன்ற பிரச்சனையில் சிக்கி வருகிறார் வடிவேலு. இதையும் மீறி இப்படத்தில் இவர் இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!