தாயகத்தின் தேடலை புலம்பெயர் தேசத்திற்கு கொண்டு செல்லும் லங்கா4 ஊடகத்தின் மற்றுமொரு சேவை
தமிழ் இணைய ஊடகமான லங்கா4 இணையத்தளம் தனித்து செய்திகளை வெளியிடுவது மட்டுமல்லாமல் அதை தாண்டி உதவித் திட்டத்திற்கு தாயகத்தில் இருந்து புலம்பெயர் தேசத்திற்கு மக்களை இணைத்துவிடும் மற்றுமொரு சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
வவுனியா முல்லைத்தீவு யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள வாழ்வாதாரத்திற்கு பெரும் இன்னல்படும் குடும்பங்கள் லங்கா4 இணையத்தளம் ஊடாக உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிக்கலாம்.
அந்தவகையில் இவ்வாறு உதவி கோருவோரின் விபரங்களை உதவி வழங்குபவர்களுக்கு லங்கா4 இணையத்தளம் தகவல்களை வழங்கும்.
புலம்பெயர் தேசங்களில் பல உதவி வழங்கும் நல்ல உள்ளங்கள் பலர் உள்ளனர். இருந்தும் எவ்வாறு வழங்குவது என்பதில் சிக்கல் நிலை இருப்பதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சிலர் ஊடாக உதவித் தொகைகள் வழங்கப்பட்டும் அவை சரியான இடத்திற்கு செல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் உதவி வழங்கியோர் சார்பில் எழுந்துள்ளது.
அந்தவகையில் லங்கா4 ஊடகம் இந்த சேவை ஊடாக உதவி தேவைப்படுவோர் குறித்த தகவல்களை வழங்கவுள்ளது.
உதவி வழங்கும் நல்ல உள்ளங்கள் நேரடியாக அவர்களோடு தொடர்புகொண்டு உதவித் தொகைகளை வழங்கலாம்.
உதவி வழங்குபவர்கள் மற்றும் உதவித் தொகைகள் தொடர்பில் எந்தவொரு விடயத்திலும் லங்கா4 இணையத்தளம் சம்பந்தப்படாது.
நேரடியாக உதவி பெறுவோர் மற்றும் உதவித் தொகையை வழங்குவோரை இணைத்துவிடும் செயற்பாடுகளை மாத்திரமே செய்யும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.