பாரீஸில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 24 பேர் படுகாயம்

#France #Hospital #fire #Building
Prasu
2 years ago
பாரீஸில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 24 பேர் படுகாயம்

மத்திய பாரீஸில் வரலாற்று சிறப்புமிக்க 5வது வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து குறைந்தது 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தீ விபத்துக்கு முன்னதாக பெரிய வெடி சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், தீ விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக எரிவாயு கசிவு ஏற்பட்டதாக மாவட்ட மேயர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், வெடிப்புக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

 சம்பவ இடத்தில் மொத்தம் 230 தீயணைப்பு வீரர்களும், ஒன்பது மருத்துவர்களும் விரைந்தனர். இந்த தீ விபத்தில் தீக்காயங்களுடன் 24 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!