கட்டணத்தை அதிகரிப்பதற்கு எதிராக ஆராய குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை
#SriLanka
#Sajith Premadasa
#Lanka4
#srilankan politics
Kanimoli
2 years ago
சட்டவிரோதமாக மக்களால் தாங்க முடியாத வகையில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக அது தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியினர் இன்று(22) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.
தன்னிச்சையாக மின்கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இந்த அநீதி குறித்து விசேட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இதனூடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.