கிளிநொச்சி வர்த்தகர்கள் நாளைய தினம் கடையடைப்பு: பிரதேச செயலகத்தில் இருந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வாடகை வரி 5 மடங்காக உயர்த்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் நாளைய தினம் கடையடைப்பு போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி சேவைச்சந்தையானது கரைச்சிப்பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் வருகிறது.
கடந்த பல வருடங்களாக 1500 ரூபாயாக வாடகை அறவிட்டு வந்த நிலையில் திடீரென ஜூன் மாதத்திலே அது 7500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வர்த்தகர்களும் நுகர்வோரும் பாரிய நெருக்கீடுகளை சந்தித்துள்ளனர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர் சங்கம் நாளைய தினம் கரைச்சிப்பிரதேசசபைக்கு எதிராக கடையடைப்பு போராட்டத்தினை மேற்கொள்வதற்கு வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .
இதேவேளை கடையடைப்பை மேற்கொண்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சிப்பிரதேச சபையின் ஊடாக வர்த்தகர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
