சீனாவில் 60 ஆண்டுகளுக்குப் பின் பெய்ஜிங் நகரில் அதிக வெப்பநிலை பதிவு
#China
#world_news
#Lanka4
#சீனா
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago
சீன பெய்ஜிங் நகரில் இன்று வெப்பநிலை 41.8 பாகை சென்ரிகிரேட்டை பதிவு செய்துள்ளதென சீன வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். இது 60 ஆண்டுகளுக்குப்பிறகு பதிவாகும் வெப்பமாகும்.
ஜூன் இறுதி வரை நீடிக்கும் தீவிர வெப்பநிலையுடன் நகரம் நீடித்த வெப்ப அலையை அனுபவித்து வருகிறது. இன்று, அதிகாரிகள் 1961 இல் பதிவுசெய்தல் தொடங்கியதிலிருந்து இது மிகவும் வெப்பமான ஜூன் நாள் என்று தெரிவித்தனர்.
கடந்த மாதம் 25 மில்லியன் மக்கள் வசிக்கும் சீனாவின் மிகப்பெரிய நகரான சங்காயில் மே மாதம் பதிவான வெப்பநிலையானது ஒரு நுாற்றாண்டின் பின் பதிவான வெப்ப அதிகரிப்பாகும்.
நாட்டின் தலைநகரான பெய்ஜிங்கில் 21 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இன்று, நகரின் வடக்கில் உள்ள வானிலை நிலையம் 41.8C ஆக உயர்வை பதிவு செய்தது.