மாடுகளுக்கு பரவியுள்ள தோல் நோய்: விரைவில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

#SriLanka #Parliament #Lanka4 #Cow
Kanimoli
2 years ago
மாடுகளுக்கு பரவியுள்ள தோல் நோய்: விரைவில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாட்டில் மாடுகளுக்கு தோல் தொற்று நோய் பரவி வருவது தொடர்பில் சுகாதார அமைச்சும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சுகாதார அமைச்சும் எவ்விதமான அறிவிப்பையும் வழங்க தவறியுள்ளதால் முஸ்லிம்கள் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுவது தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளை எதிர்நோக்கியிருக்கின்ற தருணத்தில் உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் மார்க்க அனுஷ்டானம் இருக்கிறது. இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் பல தடவை துறைசார் மேற்பார்வை குழுவில் சுட்டிக்காட்டியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.

 எனவே, முஸ்லிம்கள் உழ்ஹிய்யா கடமையை சிரமமின்றி மேற்கொள்ள அது தொடர்பான வழிகாட்டல்களை முன்வைக்க முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!