முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#Mullaitivu
#Lanka4
#இலங்கை
#லங்கா4
#ஜனாதிபதி
Mugunthan Mugunthan
2 years ago
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற வட மாகாணத்துக்கான விசேட தேவை உடையவர்களுக்கான வைத்தியசாலையை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி வருகை தரவுள்ளார்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் விசேட நடமாடும் சேவை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலமாக முல்லைத்தீவு மக்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்க உள்ளதாகவும் பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.