மியான்மரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்களால் பரபரப்பு!
#Earthquake
#Thailand
#2023
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
#Myanmar
Mani
2 years ago
மியான்மரில் தொடர்ச்சியாக மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. யாங்கூரில் நேற்று இரவு 11:56 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதன்பின், அதிகாலை, 2:52 மணிக்கு, மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.2 அளவு மற்றும் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இன்று காலை 5.43 மணிக்கு மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது, ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி 48 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
மியான்மரின் யாங்கூனில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பெரும் பீதி ஏற்பட்டது. இதனால், மக்கள் இரவு முழுவதும் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.