மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு கைகொடுத்த தியாகி அறக்கொடை நிதியம்!
மட்டக்களப்பு அமிர்தகழி பாடசாலை வீதியிலிள்ள வீடொன்றில் திருத்தப்பணிகளில் ஈடுபட்ட இருவர் மின்சாரம் தாக்கி கடந்த (14) காலை உயிரிழந்துள்ளனர்.
வீட்டின் கூரையைத்திருத்தும் போதே இருவரும் இவ்வனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய ஒருவரும் 25 வயதான இளைஞர் ஒருவருமே உயிரிந்தவர்களாவர்.
உயிரிழந்த 36 வயதுடைய குடும்பஸ்தரின் வீட்டு நிலைமையை அறிந்த தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்களின் ஆலோசனைக்கமைய பிள்ளைகளது கல்வி மற்றும் அவரினது வீட்டின் அடிப்படைச் செலவினை மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியினை ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் நிதியத்தின் இனைப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் மூலம் உயிரிழந்தவரின் மனைவி, பிள்ளைகளிடம் கையளிக்கப்பட்டது.
உயிரிழந்தவரின் முதலாவது பிள்ளை தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவியாவார். இரண்டாவது பிள்ளை தரம் ஒன்றில் கல்வி பயிலும் மாணவனாவார்.
தொடர்ந்தும் பிள்ளைகளின் கல்வி மற்றும் பராமரிப்புச் செலவிற்கான மாதாந்த நிதியுதவி மூல வழங்குவதற்கு தியாகி அறக்கொடை நிதியத்தின் இஸ்தாபகத்தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் ஐயா முன்னிப்பதாக உயிரிழந்தவரின் மனைவியிடம் தொலைபேசி மூலமாக நம்பிக்கை தெரிவித்தார்.
இதன் போது ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையிலான ஊடகக்குழுவினர் குறித்த உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச்சென்று அவர்களின் துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். இதன் போது கருத்துத்தெரிவித்த ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ், "துன்பத்திலுள்ள மக்களுக்கு நேசக்கரம் நீட்டி உடனடி உதவி மற்றும் நிவாரணத்தை வழங்குவதே தியாகி ஐயாவின் முன்னுதாரணமிக்க செயற்பாடாகும்.
அந்த வகையில் , அவரின் சேவை இன, மத வேறுபாடின்றி நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.



