பாகிஸ்தானில் இருந்து வந்த கப்பலில் 65 கோடி பெறுமதியான ஹெரோயின்!

#SriLanka
Mayoorikka
2 years ago
பாகிஸ்தானில் இருந்து வந்த கப்பலில்  65 கோடி  பெறுமதியான ஹெரோயின்!

பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து வந்த கப்பலொன்றில் இருந்து சுமார் 65 கோடி ரூபா பெறுமதியான 16,193 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை இலங்கை சுங்கத் துறைமுகக் கட்டுப்பாட்டுப் பிரிவு கைப்பற்றியதாக இலங்கை சுங்கத் துறைமுகக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

 துறைமுக சுங்கக் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி, நீண்ட விசாரணையின் போது, ​​கப்பலின் குளிர் கொள்கலன் பெட்டியொன்றில் இந்த ஹெரோயின் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த போதைப்பொருள் கையிருப்பு மற்றும் சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்கத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!