பொலிஸ் காவலில் இறந்த ராஜகுமாரியின் மரணம் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

#SriLanka #Colombo #Police #Court Order
Prathees
2 years ago
பொலிஸ் காவலில் இறந்த ராஜகுமாரியின் மரணம் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜகுமாரி என்ற வீட்டுப் பணிப்பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் அடங்கிய அறிக்கையை அடுத்த மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல இன்று உத்தரவிட்டார்.

 இந்த சம்பவம் தொடர்பான விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

 குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ் சாட்சியமளித்த மகேந்திரன் சுரேஸ், வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்குள் ராஜகுமாரி பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டதைக் கண்டதாகத் தெரிவித்தார்.

 ஒரு நாள் புறக்கோட்டை பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் இருந்த போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்து கைவிலங்கிட்டு வாகனத்தில் ஏற்றி பொரளை கோட்டா வீதியில் உள்ள ராஜகுமாரி வேலை செய்த வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக சாட்சி கூறினார்.

 மேலும் ராஜகுமாரியை அழைத்து வந்த பொலிசார் கைவிலங்கின் மறு மூலையையும் அவள் கையில் போட்டதாக சாட்சி கூறினார்.

 ராஜகுமாரி அழைத்துச் செல்லப்பட்ட நேரத்தில், அவருக்கு உடல்நிலை நன்றாக இருந்ததாகவும் அவர் நன்றாக நடந்து கொண்டிருந்தார் என்றும் சாட்சி கூறினார்.

 தானும் ராஜகுமாரியும் வெலிக்கடை பொலிஸாருக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அங்கிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தம்மை தாக்கியதாகவும் தெரிவித்த சாட்சியாளர், அந்த அதிகாரிகளின் நடத்தையையும் ராஜகுமாரி குறிப்பிட்டுள்ளார்.

 பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ராஜகுமாரியை ரப்பர் குழாயால் தாக்கியதை தான் பார்த்ததாகவும் சாட்சி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!