யாழ். அல்லைப்பிட்டியில் மனித என்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிப்பு
#SriLanka
#Jaffna
#Human
#இலங்கை
#லங்கா4
#யாழ்ப்பாணம்
#skeleton
#என்பு
Mugunthan Mugunthan
2 years ago
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் நேற்று செவ்வாய்க் கிழமை வீடொன்றின் அத்திவார பணியின் போது மீட்கப்பட்டுள்ளன.
அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றினை அமைக்க நேற்று செவ்வாய்க்கிழமை (20) அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், அப்பகுதியில் இடம்பெற்ற வேலைகளை உடனடியாக நிறுத்தி, அப்பகுதிக்குள் எவரும் செல்லாதவாறு தடை ஏற்படுத்தினர்.
அது தொடர்பில் இன்று புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில், அப்பகுதியில் தொடர்ந்து அகழ்வு பணிகளை முன்னெடுக்க அனுமதி கோர நடவடிக்கை எடுத்துள்ளதுடன் நீதிமன்றக் கட்டளை கிடைத்ததும் அகழ்வுப்பணிகளை தொடர உள்ளனர்.
நீ