பிரசித்திபெற யூடியூபில் துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் வீடியோக்களை பதிவிட்ட இருவர் கைது
#SriLanka
#Arrest
#Social Media
Prasu
2 years ago
துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் வீடியோக்களை யூடியூபில் பதிவிட்ட இருவர் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் அவற்றைத் தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்களுடன் களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து T-56 ரக துப்பாக்கி, 5 அடி நீளமான வேறு ரக துப்பாக்கி, ரவைகள், துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் இரண்டு கிரைண்டர்கள் மற்றும் கிரில் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் துப்பாக்கிகளை பயன்படுத்தி சந்தேக நபர்கள் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பதுரலிய சீலதொல பிரதேசத்தைச் சேர்ந்த 41 மற்றும் 21 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.