புதிய பொலிஸ்மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படலாம் எனத் தகவல்

#SriLanka #Police #Lanka4
Kanimoli
2 years ago
புதிய பொலிஸ்மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படலாம் எனத் தகவல்

புதிய பொலிஸ்மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சேவை நீடிப்பில் உள்ள சி.டி.விக்ரமரத்னவின் சேவைக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான தேஷ்பந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பதிநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஜனாதிபதி, நாடு திரும்பிய பின்னர், பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்படும் அதிகாரி தொடர்பில் தீர்மானம் எடுப்பார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் மா அதிபர் பதவிக்கான ஜனாதிபதியின் பரிந்துரை அரசியலமைப்பு சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!