மாணவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மாணவன் கைது
கெக்கிராவ ரணஜயபுர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பதினைந்து வயது மாணவன் அதே பாடசாலையில் கல்வி கற்கும் பதினாறு வயது சிறுமியை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் ரணஜயபுர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபர் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் மாணவி ஒருவரே அந்த வீட்டிற்கு அருகில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலில் மாணவியின் இடது கை மற்றும் இடது காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் மாணவியை தாக்கியதாக கூறப்படும் மாணவன் மாணவியை தாக்க பயன்படுத்தியதாக கூறப்படும் கத்தியை எடுத்து ரணஜயபுர பொலிஸாரிடம் ஒப்படைத்ததை அடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும், காயமடைந்த மாணவியிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் காரணம் தெரியவரும் எனவும் ரணஜயபுர பொலிஸ் நிலைய பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்குரிய மாணவன் நேற்று (20) கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.