உலகின் உயர்தர நகரங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஆசிய நகரங்கள்

#China #Singapore #Hong_Kong
Prasu
2 years ago
உலகின் உயர்தர நகரங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஆசிய நகரங்கள்

உலகின் மிக விலையுயர்ந்த உயர்தர நகரங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை ஆசிய நகரங்கள் பிடித்துள்ளன. இதன்படி மிக விலையுயர்ந்த நகரமாக முதலாவது இடத்தை சிங்கப்பூர் பெயரிடப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சீனாவின் ஷாங்காய் நகரமும், மூன்றாது இடத்தை ஹாங்காங் நகரமும் பிடித்துள்ளது.

சுவிஸ் செல்வ மேலாளர் ஜூலியஸ் பேர் குரூப் லிமிடெட்டின் அறிக்கையின்படி, இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடியிருப்பு சொத்துக்கள், கார்கள், வணிக வகுப்பு விமானங்கள், வணிகப் பள்ளி மற்றும் பிற ஆடம்பரங்கள் போன்ற பல்வேறு காரணிகளை ஆய்வு ஆய்வு செய்து இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி கடந்த ஆண்டு ஐந்தாவது இடத்தில் இருந்த சிங்கப்பூர் நகரம் இந்தவருடம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

 அத்துடன் ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் போன இடங்களான லண்டன், நிவ்யோர்க், துபாய் உள்ளிட்ட நாடுகளும் முதல் பத்து இடங்களுக்குள் தெரிவாகியுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!