முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடிய டக்ளஸ் தேவானந்தா
யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்த கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முச்சக்கர வண்டி சேவை மேலும் வினைத் திறனான சேவையாக மாற்றுவது தொடர்பாகவும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
குறிப்பாக முச்சக்கர வண்டி கட்டண அறவீடுகள் தொடர்பாக தனக்கு கிடைத்து வருகின்ற முறைப்பாடுகள் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 01 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர்களை(கட்டண வாசிப்பு மானி) பொருத்துவதற்கு முச்சக்கர வண்டி உரிமைாயளர்களினால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோன்று, முச்சக்கர வண்டி தரிப்பிடம் மற்றும் தரிப்பிட பங்கீடு தொடர்பாக மாநகர சபை அதிகாரிகள் மற்றும் பொலிஸாருடன் கலந்துரையாடி சரியான வழிமுறைகளை பின்பற்றுவதற்கும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்தூள்ளனர்.
இக்கலந்துரையலில் மாநகர சபை ஆணையாளர் மற்றும் யாழ். மாநகர போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.