தமிழர்களுக்கான தீர்வு: லண்டனில் சுபாஷ்கரனிடம் உறுதியளித்த ஜனாதிபதி

#SriLanka #UnitedKingdom #Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
தமிழர்களுக்கான தீர்வு: லண்டனில் சுபாஷ்கரனிடம் உறுதியளித்த ஜனாதிபதி

பிரித்தானியாவுக்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதியை, லைக்கா உரிமையாளர் சுபாஷ்கரன் மற்றும் துணைத்தலைவர் பிரேம் சிவசாமி சந்தித்துள்ளனர்.

 குறித்த சந்திப்பில், இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் அரசியல் கைதிகளையும் தாம் விடுதலை செய்வதாக ரணில் ஒப்புக்கொண்டு, அதனை உறுதிசெய்துள்ளார்.

 இலங்கை அபிவிருத்தி அடையவேண்டும் என்றால், தமிழர்களுக்கு ஒரு தீர்வு மிக முக்கியமானது என்பதனை சுபாஷ்கரன் ஆணித்தரமாக முன்வைத்துள்ளார். 

இதனை ரணில் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் முதல் கட்டமாக ஒரு நம்பிக்கையை பரஸ்பரம் உண்டாக்க, ஒட்டுமொத்த அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளார். 

இது தமிழர்களை பொறுத்தவரை பெரும் காய் நகர்த்தலாக அமைந்துள்ளது.

 இருப்பினும் சிலர் இந்த நிலையை அறிந்துகொள்ளாமல், ரணிலுக்கு எதிராக போராட்டம் என்று களத்தில் குதித்துள்ளார்கள். 

இந்த போராட்டங்களால் என்ன நடந்துவிடப் போகிறது? தமிழர்களுக்கு தற்போது தேவை ஒரு பலமான அரசியல் நகர்வு தான். போராட்டம் அல்ல. இதனை அவர்கள் நிச்சயம் புரிந்துகொள்ளும் நாள் விரைவில் வர உள்ளது எனவும் ஒரு சாரார் குறிப்பிடுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!