பிரித்தானியாவின் வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டம் மூலம் இலங்கைக்கு நன்மை!

#UnitedKingdom
Mayoorikka
2 years ago
பிரித்தானியாவின் வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டம் மூலம் இலங்கைக்கு நன்மை!

பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் அறிக்கையின்படி பிரித்தானியா உலகின் மிகவும் தாராளமான முன்னுரிமை வர்த்தக திட்டங்களில் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது.

 நேற்று நடைமுறைக்கு வந்த இந்ததிட்டம், இலங்கைக்கும் நன்மை பயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் பயனடையும் 65 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். பிரித்தானியாவின் இன் வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டம் (DCTS) கட்டணக் குறைப்புகளையும் எளிமையான வர்த்தக விதிமுறைகளையும் வழங்குகிறது.

 இந்த திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு, தற்போது நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான சட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

 இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாக இங்கிலாந்து விளங்குவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்தார்.

 இந்தநிலையில் இலங்கை ஏற்றுமதியாளர்கள் பிரித்தானியாவுடனான தமது வாய்ப்புகளை விரிவுபடுத்துவார்கள் என நம்புவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

 இலங்கை போன்ற நாடுகளுடன் சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்தை வளர்ப்பதற்கும், பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும், வேலைத்திட்டங்களை ஆதரிப்பதற்கும் பிரித்தானியாவின் இன் அர்ப்பணிப்புக்கு வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டம் DCTS ஒரு உறுதியான எடுத்துக்காட்டு எனவும் சுட்டிக் காட்டப்படுள்ளது.

 இதேவேளை வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டம் ஆனது இலங்கையை 92% பொருட்களுக்கு சுங்கவரியின்றி இப்போது பிரித்தானியாவுடன் வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது எனவும் இது பிரித்தானிய சந்தையில் இலங்கை தயாரிப்புகளின் போட்டித்தன்மையை அதிகரிக்க வழிவகுக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!