ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடரில் தமிழர்களுக்கு நீதிகோரி செயற்பாட்டாளர்கள் ஆரவாரம்
#SriLanka
#Geneva
#UN
#War
#Lanka4
Kanimoli
2 years ago
ஐக்கிய நாடுகள் சபையின் 53 வது மனித உரிமை கூட்டத்தொடர் இன்று 20-06-2023 இரண்டாவது நாளாக ஜெனிவாவில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அதேநேரம் இலங்கை தமிழர்களுக்கு நீதிகோரி அனைத்துலக மனித உரிமைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை அரசினால் தமிழர்கள் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனப்படுகொலையின் நிழற்பட ஆதாரங்களை ஜெனிவா முன்றலில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து அங்கெ வரும் வெளிநாட்டினருக்கு பொதுமக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விளக்கமளித்து வருகின்றனர்.



