மாமன்னன் படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு
#Cinema
#Court Order
#TamilCinema
#Tamilnews
#Breakingnews
#Case
#Movies
Mani
1 year ago

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள “மாமன்னன்” திரைப்படம் வரும் 29ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் டிரைலர் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. படத்தின் ரிலீஸ் பணிகள் வேகமாக நடந்து வருகிறது
மாமன்னன் படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி ஓ.எஸ்.டி பிலிம்ஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், உதயநிதி ஸ்டாலினின் ஏஞ்சல் படம் 80 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள 20 சதவீத பட சூட்டிங்கிற்கு, ஒப்பந்தப்படி உதயநிதி கால்ஷீட் தராமல் புறக்கணிக்கிறார் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.



